
மஸ்கெலியாவில் பாரிய காட்டுத்தீ
மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்ட மறே பிரிவில் இன்று ஞாயிற்று கிழமை பகல் 12 மணியளவில் பாரிய காட்டுத் தீ பரவி வருகிறது.
அப் பகுதிக்கு நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிசார் மறே தோட்ட மக்கள் சென்று தீயை அணைக்க முயன்ற போதும் கடும் வெப்பமான வானிலை காரணமாக தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இத் தீயை அணைக்காவிடின் பாரிய அளவில் வன பகுதி தீயினால் நாசமடைய வாய்ப்பு உள்ளது.
அத்துடன் வன ஜீவராசிகள் மற்றும் பறவைகள் அழிந்து போகும் நிலை தோன்றியுள்ளதோடு, நீர் ஊற்றுகள் வற்றி போகும் நிலை தோன்றியுள்ளது.
