மஸ்கெலியாவில் நபர் ஒருவரின் சடலம் மீட்பு

மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள வாய்க்காலில் இருந்து சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியாவை சேர்ந்த 49 வயதுடைய நபரே இதன் போது உயிர் இழந்துள்ளார்.

குறித்த நபரின் மரணத்துக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்