
மஸ்கெலியாவில் கஞ்சாவுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது
-மஸ்கெலியா நிருபர்-
மஸ்கெலியா பொலிஸாரினால் இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, 45,000 ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கஞ்சா பொதிகளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சோதனை மஸ்கெலியா நகர எல்லைக்குள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மஸ்கெலியா மற்றும் சாமிமலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது, கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் நீண்டகாலமாக இந்த கஞ்சா வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
