மழை வெள்ளம் காரணமாக மட்டக்களப்பில் சில பகுதிகளில் போக்குவரத்து தடை

-கிரான் நிருபர்-

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மற்றும்  நேற்று பெய்த கடும் மழை காரணமாக கிரான் பாலம் ஊடான போக்குவரத்து தடைப்பட்டதுடன் கிரான் பாலம், புலிபாய்ந்தகல் பாலங்களுக்கு மேலாக வெள்ளநீர் போவதினால் தொப்பிக்கலை அக்குறானை மினிமித்தவெளி மற்றும் முறுத்தானை போன்ற கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து தடைப்பட்டதுடன் சில வீதிகள் சேதமடைந்துள்ளது.

கிரான் பிரதேச செயலகத்துக்கு மற்றும் பாடசாலைக்கு செல்லும் ஆசிரியர்கள் ஏனைய அரச திணைக்களங்களுக்கு அன்றாடம் தங்களின் சேவையினை பெறச் செல்லும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.