மழை நிலைமை படிப்படியாக குறைவடையும்
நாட்டின் தென்மேற்கு பகுதியில் பெய்து வரும் கடும் மழை இன்று வெள்ளிக்கிழமை முதல் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணம், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மி.மீ. 50க்கு மேல் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யும்.
அதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள் மற்றும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
