
மழையினால் கைவிடப்பட்ட போட்டி
இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 9.4 ஓவர்கள் நிறைவில் 97 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.
இதனையடுத்து இடைவிடாது தொடர்ந்துதும் மழை பெய்ததால் போட்டி கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
