
மழையினால் இடிந்து விழுந்த வீடுகள்
பேருவளை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அளுத்கம வாராபிட்டிய மீராச்சிகந்தவில் இன்று செவ்வாய் கிழமை காலை பெய்த மழையினால் இரண்டு வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளதோடு மண்மேடும் சரிந்து வீழ்ந்ததில் சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
பேருவளை பிரதேச செயலகத்தின் அனர்த்த நிவாரணப் பிரிவினர் மற்றும் களுத்துறை அனர்த்த முகாமைத்துவ நிலைய இராணுவ அதிகாரிகளும் அந்த இடத்தை அவதானித்துள்ளதுடன் இரு வீடுகளிலும் வசிப்பவர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
