மழையால் தடைப்பட்டுள்ள இலங்கை-நியூசிலாந்து கடைசி ஒருநாள் போட்டி!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி மழையால் தடைப்பட்டுள்ளது.

பல்லேகலவில் தொடங்கிய 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி நாணய சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

தொடக்க வீரர்களாக டிம் ராபின்சன், வில் யங் களமிறங்கினர்.

ராபின்சன் 9 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், முகமது ஷிராசின் பந்து வீச்சில் அசலங்காவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஹென்றி நிக்கோல்ஸ் நிதானமாக ஆடினார்.

மறுமுனையில் பவுண்டரிகளை விரட்டிய வில் யங், 9ஆவது ஒருநாள் அரைசதம் அடித்தார்.

அணியின் ஓட்டங்கள் 112/1 (21) ஆக இருந்தபோது ஆட்டம் மழையால் தடைப்பட்டது.

யங் 56 (68) ஓட்டங்களுடனும், நிக்கோல்ஸ் 46 (51) ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்