மல்லிகைத்தீவு மங்களேஸ்வரர் ஆலயத்தின் சிவராத்திரி பூஜை!

-மூதூர் நிருபர்-

மூதூர் -மல்லிகைத்தீவு மங்களேஸ்வரர் ஆலயத்தின் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் இன்று புதன்கிழமை  இடம்பெற்றது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் இவ் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

பூஜை வழிபாடுகளை மல்லிகைத்தீவு  மங்களேஸ்வரர் ஆலயத்தின் குருக்கள் சிவஸ்ரீ ஸ்ரீ ரூப சர்மா நிகழ்த்தினார்.இதன் யாக பூசை ,வசந்த மண்டப பூஜைகளும் இடம்பெற்றன.

இப் சிவராத்திரி பூஜை வழிபாடுகளில் அதிகளவான சைவ பக்த அடியார்கள் பங்குபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.