
மலை ஏறிய பல்கலை மாணவனுக்கு நேர்ந்த கதி
ரம்புக்கனை – அலகல்ல பகுதியில் மலை ஏறுவதற்காக சென்ற பல்கலைக்கழக மாணவர் ஒருவர் இன்று ஞாயிற்று கிழமை காலை தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.
வயம்ப பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் குறித்த மாணவர் சக மாணவர்களுடன் மலையேற முற்பட்டபோது, தவறி வீழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது குறித்த மாணவன் மாவனெல்லை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
