மலையகம் 200 நடைபயணத்திற்கு வலுசேர்க்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் நடைபவனி
மலையக மக்களின் வரலாற்றை நினைவுகூரறும் வகையில் தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரை முன்னெடுக்கப்படும் நடைபவனிக்கு வலு சேர்க்கும் முகமாக மட்டக்களப்பு அம்பாறை கிழக்கு மாகாண சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து கிழக்கு பல்கலைகளகத்திலிருந்து மட்டக்களப்பு காந்தி பூங்கா வரை இன்று செவ்வாய் கிழமை காலை நடைபவனி இடம்பெற்றது.
மலையக மக்களின் 200 வருடகால வரலாற்றை நினைவுகூரும் வகையிலும், மலையக மக்களின் மாண்பை பறைசாற்றும் விதமாகவும் “வேர்களை மீட்டு உரிமை வென்றிட” என்ற தொனிப்பொருளில், ‘மலையக எழுச்சிப் பயணம்” என்ற வாசகத்துடன் மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவினால் கடந்த மாதம் 28 ஆம் திகதி ஏற்பாடு நடைபவனி செய்யப்பட்டிருந்தது.
குறித்த நடைபவனி 16 நாட்கள் தொடர்ச்சியாக இந்த நடைபயணம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் 12ம் திகதி மாத்தளையில் நிறைவடையவுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்