மலையகப் பெண்கள் செயற்பாடு மற்றும் வேலைத் திட்டம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட வரைபு கையளிப்பு

-மஸ்கெலியா நிருபர்-

“பிரிடோ” நிறுவனத்தின் சார்பில், பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்பான நிகழ்வு, கொட்டகலை பிரதேச சபைத்தலைவர் ராஜமணி பிரசாந்த் தலைமையில், பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இதன்போது, பிரிடோ நிறுவனத்தால் மலையகப் பெண்கள் செயற்பாடு மற்றும் வேலைத் திட்டம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட வரைபு, பிரதேச சபைத் தலைவரிடம் கையளிக்கப்பட்டது.