மலைப்பாதையில் மண்சரிவு: போக்குவரத்துத் தடை

இந்தியாவில் கனமழை காரணமாக, ஈரோடு மாவட்டம் அந்தியூர் – பர்கூர் – கொள்ளேகால் மலைப்பாதையில் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டு சாலையில் கற்கள் குவிந்து கிடக்கின்றன.

இதனால், தமிழகம்-கர்நாடகம் இடையே போக்குவரத்து தடைபட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் செல்லம்பாளையத்திலும், கர்நாடகத்தில் இருந்து வரும் வாகனங்கள் பர்கூரிலும் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களைக் கொண்டு, மண் மற்றும் கற்குவியலை அகற்றி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்