மலேசியாவில் விமான விபத்து – ஐவருக்கு காயம்

மலேசிய பொலிஸாருக்கு  சொந்தமான விமானம் ஒன்று விபத்திற்கு உள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தஞ்ஜூங் குபாங் பொலிஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் விமானி உட்பட 5 அதிகாரிகள் பயணித்து கொண்டிருந்த வேளையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் பங்கேற்கும் கடல்சார் தொடர்பான பயிற்சி நடவடிக்கைகளுக்காக சென்ற வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.