மலேசியாவில் துலங்கிய யாழ். ஆனைக்கோட்டையின் சிறுதொழில் முயற்சியாளர்

-யாழ் நிருபர்-

அண்மையில், தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச தமிழர்கள் வர்த்தக மாநாடு மலேசியாவில் நடைபெற்றது.

அம் மாநாட்டில் பங்குகொள்ள பல நாடுகளைச் சேர்ந்த தொழில் முயற்சியாளர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில்
இலங்கையிருந்து பன்னிரண்டு சிறு தொழில் முயற்சியாளர்கள் குறித்த மாநாட்டில் பங்கு பற்றியிருந்தார்கள்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஆனைக்கோட்டைக் கிராமத்தின் [J/133] சிறு தொழில் முயற்சியாளர் திருமதி சிவராசா மரியறோசரி பிரதேசத்துக்குரித்தான பனைசார் உற்பத்திகள் மற்றும் ஏனைய உள்ளூர் உற்பத்திப் பொருட்களை மலேசியாவில் காட்சிப்படுத்தி, விளக்கமளித்து அனைவரதும் ஆதரவையும் பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

இத்தகைய முன்மாதிரியாக தொழிற்படும் மரியறோசரியை பிரதேச செயலாளர், செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச மக்கள் அனைவரின் சார்பிலும் பாராட்டி வாழ்த்துவதினர். இவரும் இவரைப் போன்ற தொழில் முயற்சியாளர்களும் இத்துறையிலே நிபுணத்துவத்துடன் தொழிற்பட்டு பிரதேசத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிப்புச் செய்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது.