இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Maliban Biscuit Manufactories, 2026ஆம் ஆண்டுக்கான LMD-யின் ‘Most Respected Entities in Sri Lanka’ தரவரிசையில் 15ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதன் மூலம், கடந்த 2025ஆம் ஆண்டில் 20ஆவது இடத்தில் இருந்த மலிபன் நிறுவனம், இம்முறை ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளது. இதனையடுத்து, இலங்கையின் மிகவும் மதிக்கப்படும் முதல் 20 நிறுவனங்களுக்குள் மலிபன் இடம்பெற்றுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான இந்தத் தரவரிசை PepperCube Consultants நிறுவனத்துடன் இணைந்து LMD நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இலங்கையின் நிறுவனத் துறையைச் சேர்ந்த முகாமைத்துவ மட்டத்திலோ அதற்கு மேலான நிலையிலோ உள்ள 600 தொழில்துறை நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஆய்வில் பங்கேற்றவர்களிடம் தாங்கள் மிகவும் மதிக்கும் மூன்று நிறுவனங்களைப் பரிந்துரைக்குமாறு கேட்கப்பட்டதுடன், முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களுக்கான பரிந்துரைகளுக்கு முறையே ஐந்து, மூன்று மற்றும் ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டு இறுதி தரவரிசை தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்தவொரு நிறுவனத்திலிருந்தும் ஆறு பேருக்கு மேல் ஆய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என்பதுடன், தங்களது சொந்த நிறுவனத்தை பரிந்துரைக்கவும் பங்கேற்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் செயற்பட்டு வரும் மலிபன், உள்நாட்டு பிஸ்கட் உற்பத்தியாளராக ஆரம்பித்து, நாட்டின் பரவலாக அறியப்படும் உணவு வர்த்தகநாமங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. தரம், தொடர்ச்சியான செயல்திறன் மற்றும் நுகர்வோர் நம்பிக்கை ஆகியவை அதன் நிறுவனப் புகழை உருவாக்கிய முக்கிய அம்சங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
இந்த ஆண்டின் தரவரிசையில் ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளமை, இலங்கையின் வர்த்தக சமூகத்தில் மலிபன் நிறுவனத்தின் மதிப்புமிக்க நிலை மேலும் வலுப்பெற்றுள்ளதை வெளிப்படுத்துவதாக நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.










