
மற்றுமொரு ரயில் தடம் புரள்வு
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தலவாக்கலைக்கும் வட்டகொடைக்கும் இடையில் இன்றையதினம் வியாழக்கிழமை மாலை தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் தடம் புரண்டதன் காரணமாக மலையக ரயில் சேவைகள் தாமதமாகும் எனவும், ரயில் சேவையை வழமைக்கு கொண்டு வர தண்டவாளங்களை சரி செய்ய இன்னும் பல மணி நேரம் ஆகும் எனவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் காலை பாணந்துறையில் ரயில் ஒன்று தடம்புரண்டதால், கரையோர ரயில் மார்க்கத்தில் ஒருவழி பாதையில் மாத்திரம் ரயில் போக்குவரத்து முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
