மற்றுமொரு கோர விபத்து : 7 பேர் காயம்
வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை விபத்து சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தின் பின்புறத்தில் பாரவூர்தியொன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தின் போது பேருந்தில் பயணித்த 7 பேர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.