மறைத்து வைக்கப்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டது

-அம்பாறை நிருபர்-

வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிங்காரபுரம் பகுதி வீடு ஒன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைதானார்.

இச்சம்பவம் இன்று முற்பகல் இடம் பெற்றுள்ளதுடன் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் மல்வத்தை விசேட அதிரடி படையினர் குறித்த தேடுதல் நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 1 கிலோ 600 கிராம் நிறையுடைய கஞ்சா பொதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர் இடம்பெற்ற தேடுதலில் சந்தேகத்தின் பேரில் 18 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டு வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 

செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை அறிய தினமும் Minnal24.com பார்க்கவும்

எமது குழுவில் இணைய கீழே உள்ள Join Whatsapp Group ஐ அழுத்தவும்

JOIN WHATSAPP GROUP