
மறைத்து வைக்கப்பட்டிருந்த 53,000 போதை மாத்திரைகள் மீட்பு
மன்னார் – இலுப்பைக்கடவை தடாக பகுதியில் புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த பகுதியில் இன்று வியாழக்கிழமை சோதனை நடத்தியிருந்தனர்.
இதன்போது, பொதி செய்யப்பட்டிருந்த நிலையில், 53,000 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
