மர ஆலையில் தீ: பாரிய சொத்துகளுக்கு சேதம்

களுத்துறை வஸ்கடுவ பகுதியில் மர ஆலை ஒன்றில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படவிருந்த ஏராளமான பலகைகள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் தீயணைப்பு வாகனங்களைப் பயன்படுத்தி தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ் விபத்தில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், உயிர் சேதம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்