
மர்ஹூம் வை.எல்.எஸ் ஹமீடின் வாழ்வும் பணியும் மற்றும் நினைவுப் பகிர்வும்
-சம்மாந்துறை நிருபர் ABM.ஷிஹாப் ஆகில்-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில் மர்ஹூம் வை.எல்.எஸ் ஹமீடின் வாழ்வும் பணியும் மற்றும் நினைவுப் பகிர்வு சனிக்கிழமை கல்முனை ஆஸாத் பிளாஸா மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் முன்னாள் தேர்தல்கள் திணைக்கள ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் நினைவுரையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனால் விசேட உரையும் ஆற்றப்பட்டது.
மேலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கிய பிரமுகர்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.




