மர்ம காய்ச்சலினால் இளம் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
யாழ்ப்பாணத்தில் மர்ம காச்சலினால் பீடிக்கப்பட்ட இளம் குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளார்.
வாடி ஒழுங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சி.கேனுசா (வயது – 24) ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த ஆறாம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பின்னர், வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் 10 ஆம் திகதி காலை பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பிற்பகல் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரணவிசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்ட பின் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்