
மருந்து நிறுவனத்தில் வெடி விபத்து: பலி எண்ணிக்கை 17ஆக உயர்வு
இந்தியாவின் ஆந்திராபிரதேசத்தில் உள்ள மருந்து நிறுவனமொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்வடைந்துள்ளது.
ஆந்திராபிரதேசத்தில் உள்ள மருந்து நிறுவனமொன்றில் நேற்று புதன் கிழமை பாரிய வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில் சிக்குண்டு இதுவரையில் 17 வரையில் உயிரிழந்ததுடன் 33 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பலர் காணாமல் போயுள்ளதுடன் அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
