மருத்துவர்களின் போராட்டத்தால் வட கிழக்கில் நோயாளர்கள் அசெளகரியம்

-கிண்ணியா நிருபர்-

கொடுப்பனவுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நாடளாவிய ரீதியில் இடம் பெறுகின்ற வேலை நிறுத்தப் போராட்டத்தால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் சின்னமோகன் தனது ஊடக அறிக்கையில் இன்று தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் வடகிழக்கில் யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட வறிய மக்கள் மருத்துவ உதவிக்காக அரசவைத்திய சாலைகளுக்கே செல்கின்றனர். குறிப்பாக அன்றாட கூலித்தொழில் செய்து வாமும் மக்கள் தங்களது வைத்திய தேவைகளுக்காக பல மைல்கள் கடந்து போக்குவரத்துக்கு பணம் செலவளித்து வைத்தியசாலைக்கு சென்று திரும்பிச்செல்லும் அவல நிலைமைகளை நேரில் காணக்கூடிய நிலைமை திருகோணமலை மாவட்டத்தில் காணப்பட்டது.

இவ்வாறான நிலையில் சிறுவர் வைத்தியசாலைகள், மகப்பேற்று வைத்திய சாலைகள், புற்றுநோய் சிகிச்சைகள், சிறுநீரக சிகிச்சைப்பிரிவுகள், மற்றும் அங்கொட தேசிய மனநல வைத்தியசாலை என்பனவற்றில் வேலை நிறுத்தப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை இவ்விடயம் பாராட்டுக்குரியது.

குறிப்பாக வடகிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களை நோயாளர்களை பெரும் சிரமங்களுக்கு உள்ளாக்கும் இப் போராட்டங்கள் நிறுத்தப்படவேண்டும். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இவ்விடயத்தில் கவனம் எடுக்க வேண்டியது அவசியமாகும், மக்களின் உயிரோடு விளையாடும் இந்த இமுபறி நிலைக்கு அரசாங்கம் உடனடியாக நிரந்தர தீர்வைக்காணவேண்டும் என சின்ன மோகன் குறிப்பிட்டுள்ளார்.