மருதானைக்கும் கோட்டைக்கும் இடையில் ரயில் சேவைகள் பாதிப்பு

மருதானைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலான அனைத்து ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

தெமட்டகொட ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தவறான தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் இவ்வாறு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

குறித்த ரயில் போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை மேலும் தெரிவித்துள்ளது.