மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டு கழகத்தின் விசேட விளையாட்டு சபை கூட்டம்

-அம்பாறை நிருபர்-

மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டு கழகத்தின் விசேட விளையாட்டு சபை கூட்டம் பிரதான வீதி வர்த்தக கட்டிட தொகுதியில் நேற்று புதன்கிழமை மாலை கழகத்தின் தலைவர் அல் ஹாஜ் கலில் முஸ்தபா தலைமையில் இடம்பெற்றது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள அப்துல் அஸிஸ் வெற்றி கிண்னம் உதைபந்தாட்ட சுற்று போட்டியின் இறுதி போட்டி தொடர்பில் கோல்ட் மைன்ட் விளையாட்டு கழகம் இந்த போட்டியை எதிர் கொள்வது தொடர்பில் பல்வேறுபட்ட விடயங்கள் ஆராயப்பட்டன.

இந் நிகழ்வில் ஓய்வுநிலை வலய கல்வி பணிப்பாளர் கழகத்தின் முதல் தவிசாளர் உயர்பீட உறுப்பினர் அப்துல் ஜலில் விசேட சமுகளித்து கடந்த போட்டிகளில் கழகத்தின் பலம் பலவீனம் தொடார்பில் விரிவான விளக்கமளித்தார் .