மரவள்ளி கிழங்கு மருத்துவ பயன்கள்
மரவள்ளி கிழங்கு மருத்துவ பயன்கள்
மரவள்ளி கிழங்கு மருத்துவ பயன்கள்
🟤மரவள்ளிக் கிழங்கு சாதாரனமாக கிடைக்கும் உணவுப்பொருளாகும். போர்க்காலங்களில் உணவு கிடைக்காத போது பல நாடுகளில் மக்கள் இந்தக் கிழங்கை சாப்பிட்டே உயிர்பிழைத்திருந்தனர். வைட்டமின் A, வைட்டமின் B2, வைட்டமின் C, பாஸ்பரஸ், கால்சியம், கார்போஹைட்ரேட், புரதச்சத்து, இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் அனைத்தும் மரவள்ளி கிழங்கில் அடங்கியுள்ளது. இக்கிழங்கு பலவிதமாக சமைக்கப்படக்கூடும், ஆனால் உணவு தவிர இக்கிழங்கிற்கு மருத்துவ ரீதியான பயன்களும் உண்டென்பது அவ்வளவாக அறியப்படாத ஒன்றாகும். எனவே, அவற்றின் பயன் பற்றி பார்ப்போம்.
🔹மரவள்ளி கிழங்கில் இயற்கையாகவே வேதிப்பொருட்கள் நிறைந்து இருப்பதால் இதனை நாம் சாப்பிடுவதன் மூலம் வயிற்றில் உள்ள புழுக்களை அழித்து நலமான வாழ்க்கையினை வாழ வழிவகுக்கிறது.
🔹கிழங்கில் காணப்படும் ஃபோலேட்டுகள் உள்ளிட்ட பி தொகுப்பு விட்டமின்கள் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு நரம்புக்குறைபாடுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
🔹மரவள்ளி கிழங்கில் உள்ள இரும்பு சத்து இரத்த சிவப்பணுக்களை உற்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் இரத்த சிவப்பணுக்கள் குறைபாட்டினால் ஏற்படும் அனீமியா உள்ளிட்ட நோய்களை குணப்படுகிறது.
🔹மரவள்ளிக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. வேகவைத்த மரவள்ளிக்கிழங்கு உடலுக்கு சுறுசுறுப்பைத் தரும். மரவள்ளிக்கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் உறுதியாகும்.
🔹மரவள்ளியானது அதிகளவு கார்போஹைட்ரேட்டைக் கொண்டுள்ளது. இதனால் உடல் எடையினை அதிகரிக்க விரும்புவோர் இக்கிழங்கினை உண்டு பயன் பெறலாம்.
🔹மரவள்ளி கிழங்கில் உருவாக்கப்படும் ஜவ்வரிசிக் கஞ்சி வயிற்றுப் புண் மற்றும் உடல் சூட்டைக் குறைக்கவும் பயன்படுகின்றன
🔹இக்கிழங்கில் வைட்டமின் டீ2 மற்றும் ரிபோஃப்ளோவின் என்ற சத்துக்கள் இருப்பதால் இது ஒற்றை தலைவலிக்கு சிறந்த ஒன்றாக காணப்படுகிறது.
🔹வைட்டமின் யு சத்து இது இருப்பதால் இதனை நாம் சாப்பிடுவதனால் கண் பார்வை மேம்படும். மேலும் தூரப்பார்வை. கிட்டப்பார்வை மற்றும் மங்கலான பார்வை என இவற்றையும் குணப்படுத்துகிறது.
🔹கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான சத்துக்கள் மரவள்ளி கிழங்கில் அடங்கி இருப்பதால் இதனை சாப்பிடுவது நல்லது.
🔹மரவள்ளி கிழங்கில் ஸ்டார்ச் இருப்பதால் இதனை நாம் எடுத்துக்கொள்வதன் மூலம் செரிமானம் மேம்படும். அதேபோல் வயிற்றுல் நன்மை அளிக்கக்கூடிய பாக்டீரியாவிற்கு நன்மையினையும் அளிக்கிறது.
மரவள்ளி கிழங்கு மருத்துவ பயன்கள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்