மரம் வீழ்ந்ததில் முச்சக்கர வண்டி சேதம்
பசறை நீர்வீழ்ச்சி ஊடாக பண்டாரவளை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் பாரிய மரமொன்று வீதியில் வீழ்ந்ததில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு முச்சக்கர வண்டி சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
வீதிக்கு அருகாமையில் இருந்த குறித்த பெரிய மரம் திடீரென வீதியில் வீழ்ந்ததுடன் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது எந்த விதமான உயிர் சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதியில் விழுந்து கிடக்கும் மரத்தை வெட்டி அகற்றி வீதியில் வாகனங்கள் செல்வதற்கு இடமளிக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதயகுமார மேலும் தெரிவித்தார்.
