
மரத்தில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு
புத்தளம், கற்பிட்டி – அல்மனார் பகுதியில் வசித்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை மாலை காட்டுப்பகுதியில் உள்ள மரமொன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கற்பிட்டி – அல்மனார் பகுதியில் வசித்து வந்த எம்.ஆர்.எம்.பஸால் (வயது – 37) எனும் இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டியும், இரண்டு பாதனிகளும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சடலமாக மீட்கப்பட்டவரின் இரண்டு கைகளும் கட்டப்பட்டிருந்ததாகவும், இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இச்சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
