மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் சாதனை

மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் சாதனை

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவை சேர்ந்த வாலிபர் ஒருவர், மரங்களை கட்டிப்பிடித்து உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

வனவியல் ஆர்வலரான அபுபக்கர் தாஹிரு எனும் 29 வயது இளைஞரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

இவர், சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 19 மரங்கள் அளவிலாக, ஒரு மணி நேரத்தில் 1,123 மரங்களை கட்டிப்பிடித்துள்ளார்.

இந்த சாதனையானது டஸ்கெகி தேசிய வனப்பகுதியில் நிகழ்த்தப்பட்டுள்ளது.

சாதனை பற்றி அபுபக்கர் கூறுகையில், இந்த உலக சாதனையை அடைவது நம்ப முடியாத அளவுக்கு வெகுமதி அளிக்கிறது. இது நமது சுற்றுச்சூழல் அமைப்பின் மரங்களின் முக்கிய பங்கை எடுத்து காட்டுவதற்கான ஒரு அர்த்தமுள்ள செயலாகும் என்றார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த சாதனை தொடர்பான காணொளியை உலக கின்னஸ் சாதனை நிறுவனம் இணையத்தில் பகிர்ந்துள்ளது.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24