
மரக்கறி கடைக்குள் புகுந்த வாகனம்
-பதுளை நிருபர்-
பதுளை பசறை பிரதான வீதியில் 2 ஆம் கட்டை பகுதியில் பயணித்த கெப் ரக வாகனம் மரக்கறி கடையொன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்
பதுளையில் இருந்து பசறை நோக்கி சென்று கொண்டிருந்த கெப் ரக வாகனம் இவ்வாறு வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் எவருக்கும் காயம் ஏற்படாத போதிலும் மரக்கறி கடை சேதமடைந்தது உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை பதுளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

