மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்வு
சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையங்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார மத்திய நிலையங்களுக்கு வரும் மரக்கறிகளின் இருப்பு படிப்படியாக குறைந்து வருவதால் அவற்றின் விலை உயர்வடைந்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோ போஞ்சி ரூ.350 – 370 வரையிலும், ஒரு கிலோ கறி மிளகாய் ரூ. 480 – 550 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றது.
இதேவேளை ஒரு கிலோ கோலிபிளவர் (முட்டைகோஸ்) 400 ரூபாவாகவும் ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.330 – 380 வரையிலும் ஒரு கிலோ வெண்டக்காய் 230 ரூபாவாகவும் ஒரு கிலோ புடலங்காய் 220 ரூபாவாகவும் ஒரு கிலோ தக்காளி ரூ.180 – 210 வரையிலும் ஒரு கிலோ வெள்ளரிகாய் 100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் கிழங்கு, கரட், முட்டைகோஸ் மற்றும் முள்ளங்கி போன்றவற்றின் விலைகள் 100 ரூபாவிற்கும் குறைவாக உள்ள போதிலும் அந்த மரக்கறிகள் சில்லறை விலை 200 முதல் 250 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றன.
