
மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரிப்பு
சந்தையில், வீழ்ச்சியடைந்திருந்த மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போஞ்சி, தக்காளி, உள்ளிட்ட மரக்கறிகளின் விலையே இவ்வாறு கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலவும் சீரற்ற காலநிலையே இதற்கான பிரதான காரணம் என ஒன்றிணைந்த விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மனிங் வர்த்தக சங்கம் ஆகியவற்றின் பொருளாளர் நிமல் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
