மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி – விவசாயிகள் பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறிகளின் விலைகள் கடந்த சில நாட்களாக வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில், விவசாயிகள் பெரும் வருமானம் இழப்புக்கு உட்பட்டுள்ளனர்.

குறிப்பாக கரட், லீக்ஸ், கோவா போன்ற மரக்கறிகள் 70 ரூபாய் முதல் 90 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்படுவதால் விவசாயிகள் பாரிய நட்டத்திற்கு உள்ளாகின்றனர்.

இதன் காரணமாக உற்பத்தி செலவைக்கூட ஈடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, காலநிலை மாற்றங்களால் விவசாயிகள் நீண்ட காலத்துக்கு நிலத்தில் மரக்கறிகளை வைத்துப் பேணமுடியாத ஒரு நிலையும் உருவாகியுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

குறிப்பாக விவசாய நடவடிக்கையின் போது கேரட், லீக்ஸ், கோவா போன்றவை மூன்று மாதத்திற்கு மேல் வைத்துப் பேண முடியாத ஒரு நிலை காணப்படுகிறது.

காரணம், தொடர்ச்சியாக நுவரெலியாவில் அதிக மழை பெய்து வருவதால் மரக்கறிகள் அழிந்து போகக்கூடிய சூழ்நிலையும் உருவாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.