
மரக்கறிகளின் விலையில் திடீர் அதிகரிப்பு!
சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி போஞ்சி, கரட், கத்தரிக்காய், வெண்டிக்காய், மற்றும் பாகற்காய் போன்ற மரக்கறிகளின் விலை கிலோ ஒன்று 600 ரூபா வரையில் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன் கடந்த காலங்களில் வீழ்ச்சிடைந்த புடலங்காய் தற்போது கிலோ ஒன்று 400 ரூபாவாகவும், பாகற்காய் கிலோ ஒன்று 600 ரூபாவாகவும், பெருஞ்சீரகம் 500 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
