மரக்கறிகளின் விலைகளை காட்சிப்படுத்துவது கட்டாயம் -பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை

மரக்கறிகளை விற்பனை செய்யும் போது அதன் விலையை காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சந்தையில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதால், சில வர்த்தகர்கள் வெவ்வேறு விலைகளில் மரக்கறிகளை விற்பனை செய்கின்றனர்.

எனவே, அத்தகைய வர்த்தகர்களைக் கைது செய்ய சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.

மரக்கறிகளின் விலைகளை அறிவிப்புப் பலகையிலோ அல்லது காய்கறிகளின் நடுவிலோ, எடையுடன் காட்சிப்படுத்த வேண்டும் என பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.