
மயிலத்தமடு மாதவனை போராட்டம் இன்று நூறாவது நாள்
மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரையை மீட்டு தருமாறு கோரி பண்ணையாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று சனிக்கிழமை நூறாவது நாளாகவும் தொடர்கின்றது.
இதனை முன்னிட்டு சித்தாண்டி முருகன் ஆலய வளாகத்தில் இருந்து போராட்டம் இடம்பெறும் பகுதி வரை இன்று பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பண்ணையாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த எதிர்ப்பு பேரணியில் பங்கேற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.





