மயிலத்தமடு பண்ணையாளர்களுக்கு வலு சேர்க்க வடக்கு கிழக்கு பல்கலை மாணவர்களின் ஆர்பாட்டம்

-கிரான் நிருபர்-

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை கால்நடை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை தொடர்பான அறவழிப் போராட்டம் இன்று ஞாயிற்று கிழமை 52ஆவது நாளாக சித்தாண்டி பால் பண்ணைக்கு முன் தொடர்கிறது.

பண்ணையாளர்களும் தங்கள் கால்நடைகளும் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் அநிதிக்கு எதிராக நீதி வேண்டி இவ் சுழற்சி முறை போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

இதற்கு வலு சேர்க்கும் முகமாக இன்று வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சமூகமும், யாழ் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர்களது நீண்ட கால மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத் தருமாறு அரசிற்கு கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி இவர்கள் முறக்கொட்டன்சேனை மாரியம்மன் ஆலயத்து முன்றலில் ஒன்று கூடி கோஷங்களை எழுப்பியவாறு பதாதைகளை ஏந்தியவாறும் பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு ஊர்வலமாக வந்து அவர்களுடன், இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இவர்கள் வீதியில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது அவ் இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு பதட்டமான நிலை காணப்பட்டதுடன் கலகம் அடக்கும் பொலிஸ் பிரிவும் அவ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டிருந்ததுடன் பொலிசாரினால் மாணவர்களுக்கு “வீதியின் வெள்ளை கோட்டுக்கு பின் நின்று ஆர்ப்பாட்டம் செய்யுங்கள் என்றும் வீதியின் போக்குவரத்தினை தடை செய்ய வேண்டாம்” என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதன் போது வடக்கு கிழக்கு தமிழர் தாயகம், மாதவணை எங்கள் சொத்து, மண் துறந்த புத்தனுக்கு மண் மீது ஆசையா, மற்றும் புத்தனின் பிள்ளைகளே உயிர் கொலைகளை நிறுத்து, ஒரு புறம் தொல்லியல் மறுபுறம் குடியேற்றதிட்டம், கொல்லாமை சொன்ன புத்தன் இலங்கையில் சொல்ல மறந்தானா, என்பன போன்ற கோஷங்களை ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டோர் அரசிற்கு எதிராக எழுப்பினார்கள்.

மேலும் அவர்கள் வன்மையான கண்டனங்களை தெரிவித்ததோடு 2009 இல் இன அழிப்பை செய்த அரசாங்கம் அதற்கு மாறாக இன்று வடக்கு கிழக்கில் இருக்கும் எமது பிரதேசங்களில் தொல்லியல் எனும் பெயரில் நில ஆக்கிரமிப்பை செய்து கொண்டு வருகின்றது, இன்று ஜனநாயக ரீதியில் எமது போராட்டத்தினை மேற்கொண்டிருந்தோம் பொலிசார் அந்த போராட்டத்தினை அடக்கும் முகமாக நடந்துகொண்டிருந்தார்கள் பல்கழைக்கழக மாணவர்களுக்கே இவ்வாறான அச்ச நிலை என்றால் மக்கள் எவ்வாறு தங்கள் உரிமைக்காக போராட முன்வருவார்கள் என்பது எமக்கு புரியவில்லை .

நில ஆக்கிரமிப்பு தொடருமாக இருந்தால் பல்கலைக் கழக மாணவர்கள், இளைஞர்கள் சிவில் சமூகத்தினர் என்ற ரீதியில் மக்களுடைய சுதந்திரத்திற்காகவும் நிலங்களை பாதுகாப்பதற்காகவும் வடக்கு கிழக்கு என்ற ரீதீயில் கவனயீர்ப்பு போராட்டம் தொடரும் என்பதையும் இதனை முறையாக விசாரித்து இதற்கொரு முறையான தீர்வொன்றை அரசாங்கமும் ஜனாதிபதியையும் பெற்றுத் தருமாறும் தவறும் பட்சத்தில் எதிர்காலத்தில் வடகிழக்கு மாணவர், இளைஞர்கள் சிவில் சமூகத்தினர் இணைந்து இதனை விட பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு இதற்கான தீர்வினை பெற்றெடுப்போம் என ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக் கழக மாணவர்கள் தெரிவித்தனர்.

மயிலத்தமடு பண்ணையாளர்களுக்கு வலு சேர்க்க வடக்கு கிழக்கு பல்கலை மாணவர்களின் ஆர்பாட்டம்

மயிலத்தமடு பண்ணையாளர்களுக்கு வலு சேர்க்க வடக்கு கிழக்கு பல்கலை மாணவர்களின் ஆர்பாட்டம்

மயிலத்தமடு பண்ணையாளர்களுக்கு வலு சேர்க்க வடக்கு கிழக்கு பல்கலை மாணவர்களின் ஆர்பாட்டம்

மயிலத்தமடு பண்ணையாளர்களுக்கு வலு சேர்க்க வடக்கு கிழக்கு பல்கலை மாணவர்களின் ஆர்பாட்டம்

மயிலத்தமடு பண்ணையாளர்களுக்கு வலு சேர்க்க வடக்கு கிழக்கு பல்கலை மாணவர்களின் ஆர்பாட்டம்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்