மயக்க மருந்தால் மரணம்: பணிப்பாளர்களுக்கு விசாரணை

சத்திரசிகிச்சையின் போது, இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தமை தொடர்பிலான விசாரணைகளுக்காக, பேராதனை போதனா மற்றும் பேராதனை பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் மற்றும் சத்திரசிகிச்சைகளை மேற்கொண்ட ஏனைய அதிகாரிகளும் இன்று வியாழக்கிழமை சுகாதார அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதன் போது சத்திரசிகிச்சை மேற்கொண்ட விதம் மற்றும் பயன்படுத்தப்பட்ட மருந்துகள் குறித்தும் விசாரணை நடத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த சத்திரசிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய இந்திய தயாரிப்பு மயக்க மருந்தினால் 4 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. எனினும், குறித்த மரணங்கள் மயக்க மருந்தினால் ஏற்பட்டதாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

எவ்வாறாயினும், அதற்கு உரிய விசாரணைகள் அவசியம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்