மன்னிப்பு கோரிய அவுஸ்திரேலிய பிரதமர்
நாடாளுமன்றத்தில் கடுமையான கருத்துகளைத் தெரிவித்தமைக்காக அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிஸ் மன்னிப்பு கோரியுள்ளார்.
டூரெட் எனப்படும் நரம்பியல் நோய் அறிகுறிகள் உள்ளதா? என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அண்மையில் கேலியாகக் கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
இந்த கருத்து தொடர்பில் பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன், அதனை மீளப்பெற வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையிலே, அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிஸ் மன்னிப்பு கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.