“மன்னிக்கவும் அம்மா” மன அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்து கொள்கின்றேன்
“மன்னிக்கவும் அம்மா” மன அழுத்தம் காரணமாகவே தான் தற்கொலை செய்து கொண்டதாக எழுத்து மூலமான கடிதத்தை எழுதி வைத்துவிட்டு ஐடிசி ரத்னதீபா சொகுசு ஹோட்டலில் இருந்து 30 வயதுடைய இளைஞன் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை மதியம் நடந்தது. பாதிக்கப்பட்டவர் ஹோட்டலின் 31வது மாடியில் உள்ள 16வது அறை இருந்து குதித்துள்ளார்.
சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டவுடன், பொலிசார் விசாரணையைத் தொடங்கினர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
குண்டசாலையில் உள்ள ஹென்வல பகுதியைச் சேர்ந்த செபால முதியன்செலகே அசந்த தனஞ்சய பண்டார (வயது3-0) என்பவர் உயிரிழந்தார்.
பாதிக்கப்பட்டவரின் கையிலிருந்து கையால் எழுதப்பட்ட ஒரு குறிப்பை பொலிசார் கண்டுபிடித்தனர், அதில் இவ்வாறு எழுதப்பட்டது:
“மன்னிக்கவும் அம்மா” நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன். நான் எப்போதும் சோகமாக இருக்கிறேன். என் துக்கத்தை என்னால் தாங்க முடியவில்லை. என் மனம் மிகவும் பலவீனமாக உள்ளது.
என் மரணத்திற்கு காரணம் மனச்சோர்வு. என் மனதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் மிகவும் தனிமையாக உணர்கிறேன். எந்த காரணமும் இல்லாமல் நான் ஒரு பெரிய வெறுமையை உணர்கிறேன். எனக்கு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இருந்தாலும் நான் மிகவும் தனிமையாக உணர்கிறேன். மன்னிக்கவும் அம்மா என, இக்கடிதத்தில் மேலும் எழுத்தபட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு கோட்டை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.