மன்னார் வொலிபோல் பிறீமியர் லீக் சுற்றுப் போட்டி

-மன்னார் நிருபர்-

மன்னார் வொலிபோல் விளையாட்டின் தரத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் விதமாக, மன்னார் மாவட்ட வெலிபோல் சம்மேளனம் மற்றும் மன்னார் வொலிபோல் லீக் இணைந்து நடாத்தும் 2022 ஆண்டுக்காண மன்னார் பிறீமியர் லீக் சுற்றுப்போட்டியின் அறிமுக விழா மற்றும் அங்குரார்பண நிகழ்வு இன்று சனிக்கிழமை மன்னார் வொலிபோல் லீக்கின் ஏற்பாட்டில் மன்னார் உப்புக்குளத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் முதல் முறையாக மாவட்ட ரீதியில் வெலிபோல் வீரர்களை உள்ளடக்கி 8 அணிகள் உருவாக்கப்பட்டு இம்மாதம் குறித்த போட்டிகள் இடம் பெறவுள்ளது.

குறித்த போட்டிகளில் கலந்து கொள்ளும் அணி வீரர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வும் அவர்களுக்கான சீருடைகளை அணியின் உரிமையாளர்களை அறிமுகப்படுத்தும் ஆரம்ப நிகழ்வு மேற்படி வைபவரீதியாக ஆரம்பிக்கப்பட்டு இடம் பெற்றது.

குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், மன்னார் பொலிஸ் அத்தியட்சகர், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மன்னார் வொலிபோல் லீக் உறுப்பினர்கள், மன்னார் வொலிபோல் சம்மேளன உறுப்பினர்கள், வொலிபோல் வீரர்கள், வொலிபோல் லீக் உரிமையாளர்காள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து வரும் ஆண்டுகளில் மன்னார் மாவட்டத்தில் இருந்து தேசிய வொலிபோல் அணிக்கு வீரர்களை உருவாக்கும் முகமாக குறித்த சுற்றுப்போட்டி ஆண்டு தோறும் இடம் பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

மன்னார் வொலிபோல் பிறீமியர் லீக் சுற்றுபோட்டி மன்னார் வொலிபோல் பிறீமியர் லீக் சுற்றுபோட்டி மன்னார் வொலிபோல் பிறீமியர் லீக் சுற்றுபோட்டி மன்னார் வொலிபோல் பிறீமியர் லீக் சுற்றுபோட்டி மன்னார் வொலிபோல் பிறீமியர் லீக் சுற்றுபோட்டி மன்னார் வொலிபோல் பிறீமியர் லீக் சுற்றுபோட்டி