மன்னார் மெய்வல்லுனர் சங்கத்தினால் விசேட மரதன் நிகழ்வு
-மன்னார் நிருபர்-
மன்னார் மாவட்ட மெய் வல்லுநர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆண், பெண் இருபாலாருக்குமான மாபெரும் மரதன் ஓட்ட நிகழ்வு ஒன்று இம் மாதம் 14 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவ, மாணவிகள், விளையாட்டு கழக உறுப்பினர்கள், விளையாட்டு அமைப்புகள் உட்பட பலர் பங்கு பற்றும் வகையில் குறித்த மரதன் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
குறித்த மரதன் ஓட்ட நிகழ்வில் முதலாம் இடத்தை பெறுபவர்களுக்கு 20,000 ரூபா பணம் பரிசு சான்றிதழ் மற்றும் வெற்றிக்கிண்ணம், இரண்டாம் இடத்தை பெறுபவர்களுக்கு 10,000 ரூபா பணம் பரிசு சான்றிதழ் வெற்றிகிண்ணம், மூன்றாம் இடத்தை பெறுபவர்களுக்கு 5,000 ரூபா பணம் பரிசு சான்றிதழ் மற்றும் வெற்றிகிண்ணம் வழங்கப்படவுள்ளது.
இம் மரதன் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்கள் ஆவணங்களுடன் மன்னார் மாவட்ட செயலகத்தில் தங்கள் பதிவுகளை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்