மன்னார் மாவட்ட பூ பந்தாட்ட அணி தேசிய ரீதியில் சாதனை
-மன்னார் நிருபர்-
மன்னார் மாவட்ட பூ பந்தாட்ட அணி தேசிய ரீதியில் இரு இடங்களை தனதாக்கியுள்ளது.
கொழும்பில் கடந்த சனிக்கிழமை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற தேசிய பூப்பந்தாட்ட போட்டியில் ஆண்கள் அணியினர் மூன்றாம் இடத்தையும், பெண்கள் அணியினர் நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டார்கள்.
முதன் முறையாக குறித்த போட்டியில் கலந்து கொண்டு குறித்த இடத்தை பெற்றுக் கொண்டுள்ளனர்.
குறித்த வீரர்களின் பயிற்றுவிப்பாளராக ஜெரமி செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.