மன்னார் நானாட்டானில் மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவர் கைது

-மன்னார் நிருபர்-

மன்னார்-முருங்கன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நானாட்டான் பிரதேசத்தில், மதுபானம் அருந்தி விட்டு மோட்டார் சைக்கிள்  செலுத்திய இரண்டு பேர் முருங்கன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

இந்த சம்பவமானது நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் நானாட்டான் சுற்றுவட்ட சந்தியில் இடம் பெற்றது.

கைது செய்யப்பட்டவர்களில், அரிப்பு துறையை சேர்ந்த ஒருவரும்,  நானாட்டான் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் என இருவரும் குடும்பஸ்தர்கள் என்று தெரிய வருகிறது.

கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முருங்கன் பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்