
மன்னார் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் உலர் உணவு வழங்கி வைப்பு
-மன்னார் நிருபர்-
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் நிதி அனுசரணையுடன் மன்னார் மாவட்டக் கிளை இணைந்து ஏற்பாடு செய்த மனித நேயப்பணியாக நேற்று செவ்வாய்க்கிழமை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நூறு குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் அலுவலகத்தில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் பேசாலை 25 வீட்டுத்திட்டம், ஜோசப்வாஸ்நகர்,ஜீவபுரம்,ஜிம்றோன்நகர்,சாந்திபுரம்,உப்புக்குளம், பள்ளிமுனை 25 வீட்டுத்திட்டம், பனங்கட்டுக்கொட்டு, கொண்டச்சிகுடா, சிலாவத்துறை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.




