மன்னார் தாழ்வுபாடு புனித ஜோசப் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப ஆய்வகம் மாணவர்களிடம் கையளிப்பு
-மன்னார் நிருபர்-
கொமர்ஷல் வங்கி மன்னார் கிளையின் நிதி உதவியுடன், மன்னார் தாழ்வுபாடு புனித ஜோசப் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப ஆய்வகம், நேற்று புதன்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு, மாணவர்களின் கற்றல் செயல் பாட்டிற்காக கையளிக்கப்பட்டுள்ளது.
நான்கு மில்லியன் ரூபாய் நிதி உதவியுடன், ஒரு தொகுதி கணினிகள் மற்றும் தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்ட நிலையில், அமைக்கப்பட்ட குறித்த தகவல் தொழில்நுட்ப ஆய்வகம் இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் கொமர்ஷல் வங்கியின் வட பிராந்திய பிராந்திய முகாமையாளர் ஜெயபாலன் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர்,பாடசாலை அதிபர்,கொமர்ஷல் வங்கியின் மன்னார் கிளை முகாமையாளர் கங்காதரன், ஆகியோர் கலந்து கொண்டு குறித்த தகவல் தொழில்நுட்ப ஆய்வகத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.
அதனை தொடர்ந்து பாடசாலை வளாகத்தில் மர நடுகையும் இடம் பெற்றது. இதன் போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.