மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல்

மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

துறைசார் அமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் எதிர்வரும் 07 ஆம் திகதி இந்தக் கலந்துரையாடல் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.