மன்னார் காற்றாலை திட்டம் தொடர்பில் ஜனாதிபதியுடன் முக்கிய சந்திப்பு
மன்னாரில் முன்னெடுக்கப்படும் காற்றாலை திட்டம் தொடர்பில் இன்றைய தினம் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது .
பாராளுமன்ற வளாகத்தில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் விடயத்துடன் தொடர்புடைய அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில், வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடன் ஜனாதிபதிக்கு முன்னர் கடிதம் அனுப்பப்பட்டது.
இந்தநிலையில், இன்றைய சந்திப்பில் ஜனாதிபதியும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மன்னாரில் காற்றாலை மின்திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன .